சிறுவனின் வாழ்க்கையில் ஒளியேற்றிய மாற்றுக் கைகள்

உலகிலேயே முதன்முறையாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரண்டு கைகளும் பொருத்தப்பட்ட அமெரிக்கச் சிறுவனால் இப்போது எழுத, உண்ண, உடுத்த முடிவதால் தங்களது முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஸாயன் ஹார்வி என்ற அந்த பத்து வயதுச் சிறுவனுக்கு கடந்த 2015 ஜூலையில் மாற்று கை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பத்து மணி நேரம் நடந்த அந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் கள் மரணமடைந்த ஒரு சிறுவனின் கைகளை எடுத்து ஸாயனுக்குப் பொருத்தினர். அந்தக் கைகளை அவனது மூளை ஏற்றுக்கொண் டதை மருத்துவச் சோதனைகளின் முடிவுகள் காட்டின.

அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பிலடெல்ஃபியா குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சாண்ட்ரா அமரால் கூறு கையில், “ஸாயனால் இப்போது தனது அன்றாட நடவடிக்கைகளை தானே செய்ய முடிகிறது. அவனது கைகளின் செயல்பாடுகளில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன் னேற்றம் இருக்கும்,” என்றார். “அவனால் இப்போது பேஸ்பால் விளையாட முடிகிறது. அவனது பெயரைத் தெளிவாக எழுத முடி கிறது,” என்றார் டாக்டர் சாண்ட்ரா. ஸாயன் பிறக்கும்போது இரு கைகளும் இருந்தன. ஆனால், அவனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது ஏற்பட்ட கடுமையான தொற்றால் மணிக்கட்டுப் பகுதி யிலிருந்து அவனது கைகளையும் முழங்காலுக்குக் கீழே அவனது கால்களையும் மருத்துவர்கள் துண்டிக்க வேண்டியதாகிவிட்டது.

போதாதற்கு, அவனது சிறுநீரகங்களும் செயலிழந்துபோயின. அவனுக்கு நான்கு வயதாக இருந்தபோது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அதைக் கொடையாக அளித்தது அவனின் தாயார் பேட்டி ரே. என்றேனும் ஒரு நாள் தன் மகனால் அவனாக உடுத்திக் கொள்ளவும் பல் தேய்க்கவும் உணவு உண்ணவும் முடியும் என்று ஸாயனின் தாயார் நம்பிக் கையுடன் இருந்தார். அது நிறைவேறியதில் அவருக்கும் அதற்குக் காரணமாக இருந்த மருத்துவர் களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி!

2015 ஜூலையில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட மாற்றுக் கைகளுடன் ஸாயன் ஹார்வி. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்