டிரம்ப்: புட்டினுடன் ரகசிய சந்திப்பு என்பது ‘பொய்ச் செய்தி’

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் தனிப்பட்ட வகையிலான, இரண்டாவது சந்திப்பு நடை பெற்றதை வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது. அது வழக்கமான, சுருக்கமான சந்திப்பு என்று வெள்ளை மாளிகை அதிகாரி அறிக்கை ஒன்றில் குறிப் பிட்டார். முன்கூட்டி வெளியில் தெரிவிக்கப்படாத இந்தக் கூட்டம் அவ்விரு தலைவர்களுக்கும் இடை யிலான உறவு பற்றி புதிய வினாக் களை எழுப்பி உள்ளது. ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் ஜி20 பொருளியல் உச்சநிலைக் கூட்டத்தின்போது எல்பே ஆற்றின் கரையோரத்தில் உள்ள இசைக்கூடம் ஒன்றில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற இரவு விருந்தில் இந்த ரகசியக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது இரு தலைவர்களின் கருத்து பரிமாற்றத்தைக் கவனித்து உதவ கிரெம்ளின் மாளிகையின் மொழிபெயர்ப்பாளர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் செய்தி நிறுவனங் கள் குறிப்பிட்டன.

இச்சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தினாலும் அது ஒரு ‘பொய்யான செய்தி’ என்று செவ் வாய்க்கிழமை பின்னேரத்தில் அதி பர் டிரம்ப் தமது டுவிட்டரில் ஆத் திரத்துடன் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையின் மற் றோர் அதிகாரி தெரிவிக்கையில் இது ஒரு ரகசிய சந்திப்பல்ல என் றும் விருந்தின் முடிவில் இருவரும் சிறிது நேரம் மட்டுமே பேசினர் என்றும் கூறினார். ரகசிய கூட்டம் நடைபெற்ற அதே நாளில் முன்னதாக அவ்விருவருக் கும் இடையில் முறைப்படியான சந் திப்பு நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட் டத்தில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

 

இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் சந்தித்தனர். படம்: ஏஎஃப்பி