மகாதீரின் ‘நானே ராஜா’ அறிவிப்பால் அன்வார் தரப்பில் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டம் அடித்தள நிலையிலான கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. தமது குழு வில் உள்ள ஒருசிலர் தேசிய முன்னணியை எதிர்கொள்ள டாக்டர் மகாதீருடன் பக்கத்தான் ஒத்துழைக்கவேண்டும் என கூறி யிருப்பதற்கு குழுவின் தலைவர் சாரி சுங்கிப் எதிர்ப்புத் தெரிவித் துள்ளார். டாக்டர் மகாதீர் உண்மையி லேயே விசுவாசமுள்ளவராக இருந் தால் தமது கருத்துக்கு அன் வாரிடமும் அவரது குடும்பத்திட மும் மன்னிப்புக் கேட்க வேண் டும் என ‘ஒட்டாய் ரீஃபார்மஸி’ வலியுறுத்தி உள்ளது. அன்வாரின் பதவி நீக்கத் திற்குப் பிறகு உதயமானது இந்த சீர்திருத்தக் குழு. இதன் தலை வராக இருக்கும் சாரி சுங்கிப் 1970களிலிருந்து அன்வாரின் ஆதரவாளராக விளங்கி வரு கிறார். “மகாதீருடன் ஒத்துழைத்தால் மட்டுமே பிரதமர் பதவியை அன் வார் அடையமுடியும் என்று கூறு வது நல்லதல்ல,” என்று சாரி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மகாதீர் முகமதுவும் அன்வார் இப்ராகிமும் ஒன்றாக இருந்தனர். இப்போதைய பிரதமர் நஜிப் (வலக்கோடி), முன்னைய துணைப் பிரதமர் முகைதீன் யாசின் (இடக் கோடி). ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’