சிங்கப்பூரில் களமிறங்கும் செல்சி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது

இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்துலக வெற்றியாளர் கிண்ண காற் பந்துப் போட்டியில் செல்சி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் களம் இறங்கும் 25 வீரர்கள் யார் யாரென்று செல்சி நேற்று அறிவித்தது. டேவிட் லுயிஸ், செஸ்க் ஃபாப்ரிகாஸ் போன்ற நட்சத்திரங்கள் சிங்கப்பூரில் விளையாடும் குழுவில் இடம் பெறுகின்றனர். இப்போட்டியில் பயர்ன் மியூனிக்கும் இன்டர் மிலானும் விளையாடுகின்றன.