சூதாட்டத்திற்கு வருபவர்களே கும்பலின் இலக்கு

மணிலா: சிங்கப்பூர் பெண்ணைக் கடத்திய கும்பலுக்கு சூதாட்ட கூடத்திற்கு விளையாட வருபவர் களே இலக்கு என்று நேற்று பிலிப்பீன்ஸ் போலிசார் தெரிவித் தனர். இதே கும்பலுக்கு வேறு இரு கடத்தல் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினர். செய்தியாளர்கள் கூட்டத்தில் கும்பலைச் சேர்ந்த 45 சந்தேக நபர்களும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அனை வரும் ஆரஞ்சு நிற டீ சட்டையை அணிந்திருந்தனர். அதில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேக நபர்களில் இருவர் மலேசியர்கள். ஒருவர் சீன நாட்டவர்.

இவர்தான் கும்பலின் தலைவன் என்று கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய கடத்தல் தடுப்புப் பிரிவின் தலை வர் மூத்த சூப்ரின்டென்டெண்ட் கிளென் டும்லாவ், “சூதாட வரு பவர்களிடம் தாங்களும் சூதாட வந்தவர்களைப் போல நடித்து கும்பல் உறுப்பினர்கள் வலையை விரித்துள்ளனர்,” என்றார். “பின்னர் விளையாட வந்த வரைக் கடத்திச் சென்று பிணைக் கைதியாக அடைத்துவைத்து அவர்கள் பணம் பறிக்கின்றனர்,” என்றும் அவர் விளக்கினார். பிலிப்பீன்ஸ் காவல்துறை தலை வரான ரோனால்ட் டி லா ரோசா, “குறைந்தது இரண்டு கடத்தல் சம்பவங்களில் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாம்,” என்று கூறினார். 2015க்கும் 2016க்கும் இடையே இரண்டு கடத்தல் புகார்கள் வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் பெண் வூ யான் என்பவரைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த 45 சந்தேக நபர்கள் மீது புதன்கிழமை அன்று குற்றம்சாட்டப்பட்டது. படம்: தேசிய போலிஸ் படை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon