வடகொரியா செல்ல அமெரிக்க மக்களுக்கு தடை

வா‌ஷிங்டன்: அமெரிக்க மக்கள் வடகொரியாவுக்கு பயணம் செய்வதை அமெரிக்கா தடை செய்ய விருக்கிறது. வடகொரியா வில் செயல்பட்டு வரும் இரு சுற்றுலாப் பயண முகவர்கள் இந்தத் தடை பற்றி தெரிவித் துள்ளனர். இந்தத் தடை பற்றி வரும் ஜூலை 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் 30 நாட்களுக்குப் பிறகு அத்தடை நடப்புக்கு வரும் என்றும் கோர்யோ மற்றும் யெங் சுற்றுலாப் பயண ஏஜன்சிகள் அறிவித்துள்ளன. அமெரிக்கா இன்னும் அத்தடையை உறுதிப்படுத்த இல்லை. வடகொரியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் கோமா நிலையில் கடந்த ஜூன் மாதம் அமெரிக் காவுக்கு கொண்டு வரப்பட்டார். அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் அந்த மாணவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் உறவு மோசம் அடைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை