500,000 மலேசியர்களுக்கு கல்லீரல் அழற்சி பாதிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் சுமார் அரை மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி சி பிரிவு நோயால் பாதிக் கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்று மலேசிய சுகாதார அமைச்சர் எஸ். சுப்ரமணியம் கூறினார். அந்நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த நோய்க்கிருமி பாதித்திருப்பது பலருக்குத் தெரியாமலே உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அக்கிருமி தொற்றியர்கள் அதற்குரிய சிகிச்சை பெறத் தவறினால் அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் அல்லது கல்லீரல் புற்றுநோய் அல்லது வேறு பல நோய்கள் வரக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் திரு சுப்பிரமணியம் கூறினார். கல்லீரல் அழற்சி சி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 2009ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 8.57 விழுக்காட்டிற்கு அதிகரித் திருந்ததாக அமைச்சர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது. கல்லீரல் அழற்சி பி பிரிவு நோய்க்கிருமி தொற்றியர் களின் எண்ணிக்கையும் அதி கரித்து வருவதாக திரு சுப்ரமணி யம் கூறினார். பச்சிளம் குழந்தை களுக்கு 1989ஆம் ஆண்டு முதல் கல்லீரல் அழற்சி பி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் நல்ல பலன் இருப்பதாகவும் அமைச்சர் சொன்னார். ஆகவே கல்லீரல் அழற்சி சி நோயால் கடுமையாக பாதிக்கப் பட்டவர்களை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon