2016ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்தன

வா‌ஷிங்டன்: உலகில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் குறைந்திருந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. தொடர்ந்து ஈராண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல்களும் அத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருந்ததாக அமைச்சு தெரிவித்தது. குறிப்பாக சிரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடு களில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறப்பட்டது. உலகில் சென்ற ஆண்டு 104 நாடுகளில் மொத்தம் 11,072 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததாகவும் அத்தாக்குதல்களில் 25,600 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

Loading...
Load next