சீன உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் இருவர் பலி; பலர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலத்திற்கு அருகே உள்ள ஓர் உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் இருவர் உயிரிழந்ததாகவும் 55 பேர் காயம் அடைந்ததாகவும் சீன ஊடகத் தகவல்கள் கூறின. விபத்து குறித்துத் தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுசென்றனர். காயம் அடைந்துள்ளவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...
Load next