சுடச் சுடச் செய்திகள்

மிண்டானோவில் ராணுவச் சட்டம் நீட்டிப்பு

மணிலா: பிலிப்பீன்சின் மிண் டானோ தீவில் ராணுவச் சட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதர வாக பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வாக்கு அளித்துள்ளனர். ஐஎஸ் தொடர்புடைய போராளிகள் கடந்த மே மாதம் முதல் தென்பகுதி மராவி நகரின் சில பகுதிகளை ஆக்கிரமித் துள்ளனர். அந்நகரில் தீவிர வாதத்தை துடைத்தொழிக்க அங்கு ராணுவச் சட்டத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறினார். அதிபர் டுட்டர்டே அவரது அதிகாரப் பிடியை வலுப் படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியே இது என்று அவரது எதிர்ப் பாளர்கள் கூறுகின்றனர். தன்னாட்சியை ஏற்படுத்த விரும்பும் முஸ்லிம் போராளிகள் குழுக்கள் மிண்டானோவில் செயல்பட்டு வருகின்றன. சட்டத்தை அமல்படுத்த ராணு வத்தை பயன்படுத்தவும் குற்றம் எதுவும் சாட்டப்படாமல் ஒருவரை நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கவும் ராணுவச் சட்டம் வகை செய்கிறது. முன்னதாக அங்கு 60 நாட்கள் வரை விதிக்கப்பட்டிருந்த ராணுவச் சட்டம் நேற்றுடன் முடிவுற்ற நிலையில் இந்தச் சட்டம் இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon