ஐவங்கா டிரம்ப்பின் அறக்கட்டளைக்கு கிடைத்த தொகை 12.6 மி. டாலர்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் ஐவங்கா டிரம்ப்புக்கு அல்லது அவரது அறக்கட்டளைக்கு 2016ஆம் ஆண்டு முதல் 12.6 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை கிடைத்திருப்பதாக நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவித்தது. ஐவங்கா டிரம்ப்பின் பல்வேறு வர்த்தகத் தொழில்கள் மூலம் அந்தத் தொகை அவருக்குக் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு குறைந்தது 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அவரது அறக்கட்டளைக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்துள்ளார். ஐவங்காவும் அவரது கணவர் ஜெரட் குஷ்னரும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உயர் ஆலோசர்களாக தற்போது பணியாற்றுகின்றனர். திரு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் மகளும் மருமகனும் வர்த்தகத் தொழில் நிறுவனங்களில் வகித்த உயர் பதவிகளிலிருந்து விலகிய போதிலும் அவர்களின் குடும்ப சொத்துகள் மூலமாக அவ்விருவருக்கும் மில்லியன் டாலர் கணக்கில் வருமானம் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon