யாழ்ப்பாணத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி மீது துப்பாக்கிச்சூடு; போலிஸ் அதிகாரி மரணம்

யாழ்ப்பாணம் உயர் நீதிமன்ற நீதி பதி எம்.இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் போலிஸ் அதிகாரி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்த ஹேமரத்ன, 51, எனப்படும் அவர் நேற்றுக் காலை மாண்டதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன. அவரது வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகக் கூறப்பட் டது. நீதிபதி இளஞ்செழியன் காய மின்றி உயிர் தப்பியபோதிலும் மற்றொரு போலிஸ் அதிகாரிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட் டது. திரு இளஞ்செழியன் சனிக் கிழமை மாலை காரில் சென்று கொண்டிருந்தபோது நல்லூர் என்னுமிடத்தில் திடீரென்று மோட் டார் சைக்கிளில் இடைமறித்த இரு ஆடவர்களில் ஒருவன் கைத் துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாகச் சுட்டான். மக்கள் நடமாட்டம் அதிக முள்ள நல்லூர் கோவில் நாற்சந்தி யில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பத்து தடவைக்கு மேல் ஆடவர் சுட்டபோது நீதிபதியை அவரது மெய்க்காப்பாளர்கள் காப்பாற்றி யதாகத் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி மீது துப்பாக்கிக் குண்டு கள் பாய்ந்துவிடாமல் தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரிகள் காயமுற்றனர். நீதிபதியின் பாது காவலர்களாக அவரது காரைத் தொடர்ந்து சொன்ற போலிஸ்காரர் ஒருவரிடமி ருந்து துப்பாக்கியைப் பறித்து துப் பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

உயிர்தப்பிய நீதிபதி எம்.இளஞ் செழியன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon