ஹாங்காங், தைவானில் புயல்காற்று

ஹாங்காங்: ஹாங்காங்கின் கிழக்குப் பகுதியில் நேற்று பலத்த புயல்காற்று வீசியது. அது சக்திவாய்ந்த புயல்காற்று என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டன. படகுச் சேவைகள் நிறுத்தப்பட்டன. விமானச் சேவைகள் தாமதம் அடையக்கூடும் என்று கெத்தே பசிபிக் ஏர்வே‌ஷ் நிறுவனம் அறவித்தது. இருப்பினும் ரயில் மற்றும் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படவில்லை. வர்த்தகமனைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கடலோரப் பகுதிகளைத்தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனைகூறப்பட்டுள்ளது. முன்னதாக தைவானின் தென்கிழக்குப் பகுதியிலும் தைவான் நீரிணைப் பகுதியிலும் பலத்த புயல் காற்று வீசக்கூடும் என்பதால் சுனாமி அலை எழக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Loading...
Load next