டெக்சஸ் மாநிலத்தில் லாரிக்குள் 9 பேர் இறந்து கிடந்தனர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கார் நிறுத்தும் இடம் ஒன்றில் காணப்பட்ட ஒரு லாரிக்குள் 9 பேர் இறந்து கிடந்ததாகவும் இன்னும் பலர் மயக்கநிலையில் காணப்பட்டனர் என்றும் அதி காரிகள் கூறினர். அந்த கண்டெய்னர் லாரிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 17 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர். லாரியில் அடைத்து வைக்கப் பட்டிருந்தவர்கள் மெக்சிகோ நாட்டவர்கள் என்று கூறப் படுகிறது. அமெரிக்காவில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவ முயன்றவர்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். போதிய காற்று வசதி இல்லாதது, கடும் வெப்பம் காரணமாக மூச்சுத் திணறி பலர் இறந்திருக்கலாம் என்று குடிநுழைவுத் துறை அதிகாரி களின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆட்களைக் கடத்தி வந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.