சுடச் சுடச் செய்திகள்

கார்குண்டு தாக்குதலில் காபூலில் 35 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு போராளி கார்குண்டை வெடிக்கச் செய்ததில் பெண்கள், குழந்தை கள் உட்பட குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும் 40 பேர் காயம் அடைந்ததாகவும் அதி காரிகள் கூறினர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். காபூலின் மேற்குப் பகுதியில் ‌ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதியில் நேற்று கார்குண்டு வெடித்தது. அரசாங்க ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்தைக் குறிவைத்து அத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக போலிசார் கூறினர். அத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

காபூலில் இந்த ஆண்டு நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு தலிபான் மற்றும் அல்-காய்தா குழுவினரே காரணம் என்று அரசாங்கம் கூறியது. இந்நிலையில் அரசாங்க துணைத் தலைமை நிர்வாகியான முகம்மது மொஹாகிக் வீட்டின் அருகில் நேற்று கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் திரு முகம்மது மொஹாகிக்கின் வீட்டைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றிருக்கலாம் என்றும் ஆனால் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் அந்த நிர்வாகியின் பேச்சாளர் கூறினார். இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் போராளிகள் அல்லது தீவிரவாதி கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 1,662 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 20 விழுக்காட்டினர் காபூலில் வசிக் கும் மக்கள் என்று ஐநா தெரி வித்துள்ளது.

காபூலில் கார்குண்டு வெடித்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ‌ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் கார்குண்டை வெடிக்கச் செய்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசாங்க ஊழியர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அது என்று கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon