ஹாங்காங் தலைவரின் முதல் சட்டமன்ற உரை: நலத் திட்டங்கள் அறிமுகம்

ஹாங்காங்: சமூக நலன், கல்வி, வீடமைப்பு போன்ற துறைகளில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பல்வேறு மக்கள் நலத் திட்டங் களை ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கெர்ரி லாம் தனது முதல் சட்டமன்ற உரையில் அறிமுகம் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் திருமதி லாம் தலைமை நிர்வாகியாக கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி பதவி ஏற்றபின் முதன்முறையாக உரை யாற்றினார். அவரது 40 நிமிட உரையில், வீடமைப்புப் பற்றிய அங்கமே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உலகின் விலை உயர்ந்த சொத்துச்சந்தையுடைய ஹாங்காங்கில் வீடு வாங்குவதற் கான புதிய திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். வீடு வாங்க முடியாதவர்களுக் கான "ஸ்டார்ட்டர் ஹோம்ஸ்" திட்டத்தைப் பற்றி அவர் விளக்க மளித்தார். "வீடமைப்புப் பிரச்சினைக்கு மாயமந்திரத்தால் தீர்வுகாண முடி யாது. அதிகாரிகளின் விவேகமும் அவர்களின் புதிய சிந்தனையும் தான் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய துணைபுரிந்துள் ளது," என்று திருமதி லாம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!