இந்தோனீசியாவில் 3.7 டன் போதைப்பொருள் பறிமுதல்

ஜகார்த்தா: இந்தோனீசியப் போலிசார் சென்ற ஆண்டு 3.7 டன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பின் அதிகாரிகள் சென்ற ஆண்டு 800க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்ட தாகவும் அந்த சோதனைகளில் வெளிநாட்டினர் 21 பேர் உட்பட 1,230 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சென்ற ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு இதற்கு முந்தைய ஆண்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அளவைக்காட்டிலும் 2.9 டன் அதிகம் என்று கூறப் பட்டது. 2015ஆண்டு மொத்தம் 580 சோதனைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அப்போது 6 வெளிநாட்டினர் உட்பட 840 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு பற்றி போலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை. போதைப்பொருளை ஒழிக்க இந்தோனீசியப் போலிசார் தொடர்ந்து பல பகுதிகளில் அதிரடி சோதனைகளை மேற் கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!