ஈராக்: கிர்குக் பகுதியை விட்டு 100,000 குர்தியர்கள் வெளியேற்றம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள கிர்குக் வட்டாரம் ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது முதல் இதுவரை 100,000க்கும் அதிகமா னோர் அச்சத்தின் காரணமாக அப்பகுதியைவிட்டு வெளியேறி யுள்ளனர் என்று குர்திய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஈராக்கின் வடக்குப் பகுதி களில் வசித்து வந்த ஆயிரக் கணக்கான குர்தியர்கள், ஈராக் ராணுவத்தினரால் விரட்டப் பட்டுள்ளனர். குர்தியர்களின் வீடுகள், கடைகள் என அனைத்தையும் ராணுவத்தினர் சூறையாடியுள் ளனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஈராக்கிய ராணுவம் இது போன்ற தகாத செயல்களில் ஈடு படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா வலி யுறுத்தியுள்ளது.

குர்தியர்கள் அதிகமாக வாழும் கனாகின் பகுதியில் ராணுவத் தினர் புகுந்ததையடுத்து எழுந்த போராட்டத்தில் ஈராக்கிய ராணு வத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டது டன் ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதனை அப்பகுதியின் மேயர் முகமது முல்லா ஹசன் தெரிவித்தார். ஈரானின் எல்லைப் பகுதியில் உள்ள கனாகின் பகுதியில் முன் னேறி வரும் ஈராக்கிய படை களுடனான மோதலைத் தவிர்க்கும் நோக்கில் அப்பகுதியை விட்டு செவ்வாய்க்கிழமையன்று குர்தியப் படை வெளியேறியது. எண்ணெய் உற்பத்தி மையமாக விளங்கும் பல இனமக்கள் வாழும் கிர்குக் பகுதியை மீண்டும் ஈராக் ராணுவம் முற்றிலுமாக தன் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஈராக்கின் பெரும் படையினருடன் எதிர்த்துப் போரிட முடியாமல் குர்தியப் படையினர் அங்கிருந்து பின்வாங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!