மகன் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு; பொங்கி எழுந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக குடியரசுக் கட்சியின் பிரசாரக் குழு உயர் அதிகாரி களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடை யிலான கூட்டத்துக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகன் ஏற்பாடு செய்தது தேசத் துரோகத் துக்கு ஈடானது என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை ஆலோசகரான ஸ்டீவ் பெனன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் மைக்கல் வூல்ஃப் என்பவரால் புனையப்பட்ட ஃபயர் அண்ட் ஃபியூரி எனும் நூலில் பெனன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

அதிபர் டிரம்ப்பின் மூத்த மகன், மருமகன், தேர்தல் பிரசாரக் குழு தலைவர் ஆகியோர் ரஷ்ய அரசாங்கத்துடன் தொடர்புடைய வழக்கறிஞருடன் சந்தித்துப் பேசியதை நாட்டுப்பற்றற்ற செயல் என்று பெனன் வர்ணித்துள்ளார். தமது மகன் மீது இத்தகைய குற்றச்சாட்டைச் சுமத்திய பெனனைப் புத்தி சுவாதீனமற்றவர் என அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். தமது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பெனனின் கருத்துகளை அவர் நிராகரித்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளை மாளிகை மூத்த ஆலோசகர் பொறுப்பிலிருந்து பெனன் நீக்கப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!