சாபா நிலநடுக்கம்: கினபாலு மலையில் 239 பேர் மீட்பு

கோத்தா கினபாலு: வடமேற்கு சாபாவின் ரனாவ் வட்டாரத்தில் நிகழ்ந்த 5.2 ரிக்டர் நிலநடுக் கத்தைத் தொடர்ந்து 239 பேர் அவர்களின் கினபாலு மலையி லிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள் ளனர். அவர்களில் 130 பேர் மலை யேறிகள். இரண்டு பெண்கள் உடல் நலி வுற்ற நிலையில் எஞ்சிய அனை வரும் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மலையிலிருந்து கீழே இறக்கிக் கொண்டுவரப்பட்ட தாக தீயணைப்பு, மீட்பு சேவைத் துறை பேச்சாளர் கூறினார். மலையேறிகள் தவிர மற்றவர் களை மலைவட்டார தேடி, மீட்கும் குழுவினர், நான்கு கட்டுமான ஊழியர்கள், சாபா பூங்கா நிர்வாக அலுவலர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்து மீட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. நிலநடுக்கத்தால் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மலையேற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி னர். இந்நிலையில் நேற்றுக் காலை யிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது 3.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகவும் வானியல் ஆய்வுத் துறை தெரிவித்தது. ரனாவ் வட்டாரத்திலிருந்து கிட்டத்தட்ட 16 கி.மீ. தூரத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வுகள் ரனாவ்வில் உணரப்பட்டதாகக் கூறப்பட்டது. சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பில்லை இந்த நிலநடுக்க சம்பவத்தில் சிங்கப்பூரர்கள் காயமுற்றதாகத் தகவல் இல்லை என சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!