வாஷிங்டன்: எஃகுக்கும் அலுமினி யத்துக்கும் வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் முடிவை பெரும்பாலான உலக நாடுகளும் ஆசிய நாடு களும் விமர்சித்து உள்ளன. இது உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சில நாடுகள் குறிப்பிட்டு உள்ளன. உலக நாடுகளின் அணுக்க இருதரப்பு உறவுகளில் அது பெரிய தொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜப்பான் கூறியுள்ளது. இந்த வரி விதிப்பை உறுதியாக எதிர்க்கப்போவதாக சீனா தெரி வித்துள்ள வேளையில், இவ்விவ காரம் குறித்து உலக வர்த்த அமைப்பிடம் புகார் செய்யவிருப் பதாக தென்கொரியா கூறியுள்ளது. அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் எஃகுக்கு 25 விழுக் காடும் அலுமினியத்துக்கு 10 விழுக்காடும் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
வரி விதிப்பு உத்தரவை செய்தியாளர்களிடம் காட்டும் அதிபர் டிரம்ப். படம்: ஏஎஃப்பி