அமெரிக்க வரி விதிப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் எஃகு, அலுமினிய வரி விதிப்பி லிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் மெக்சிகோ, கனடாவுக்கும் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் ஆஸ்திரே லியாவுக்கு புதிய வரியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதித்தனர். பின்னர் டர்ன்புல்லை குறிப் பிட்டு டுவிட்டரில் தகவல் வெளி யிட்ட அதிபர் டிரம்ப், நியாயமான வர்த்தக, ராணுவ உறவுக்கு டர்ன்புல் கடப்பாடு தெரிவித் துள்ளார் என்றார். கடந்த ஆண்டு அமெரிக் காவுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்த எஃகு, அலு மினியத்தின் மதிப்பு 400 மில் லியன் ஆஸ்திரேலிய டாலர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!