தோக்கியோ: ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, வடகொரியா விவ காரங்கள் பற்றி அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் விவாதிப்பதற்காக ஏப்ரல் முற்பகுதியில் அமெரிக்கா வுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மே மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க அதிபர் டிரம்ப் சம் மதித்துள்ள வேளையில் ஜப்பானிய பிரதமரின் பயணம் அமைகிறது. வெள்ளிக்கிழமை அன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் அபேயும் அதிபர் டிரம்ப்பும் அபே யின் அமெரிக்க பயணத்தை உறுதி செய்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷின்சோ அபே, "அணு வாயுதமற்ற கடப்பாட்டை வெளிப் படுத்தும் வகையில் அமெரிக் காவுடன் பேச்சு நடத்த வடகொரியா முன்வந்துள்ளது," என்றார். "வடகொரியாவிடம் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை வரவேற் கிறேன்," என்றும் அவர் குறிப் பிட்டார். அமெரிக்காவின் கோரிக் கையையடுத்து இரு தலைவர் களுக்கு இடையிலான முப்பது நிமிட தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அப்போது வடகொரியத் தலைவர் கிம்மை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அபேயிடம் டிரம்ப் தெரிவித்தார்.