போர்ட் டிக்சன் விபத்தில் 4 சிங்கப்பூரர்கள் மரணம்; விசாரணை கோரிய ஓட்டுநர்

போர்ட் டிக்சன் விபத்தில் 4 சிங்கப்பூரர்கள் மரணம்; விசாரணை கோரிய ஓட்டுநர்

1 mins read

போர்ட் டிக்சன்: மலேசியாவின் போர்ட் டிக்சனுக்கு செல்லும் வழியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு லாரி மோதியதில் அந்த நால்வரும் உயிரிழந்தனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் விளைவாக நால்வர் மரணம் அடையக் காரணமாக இருந்ததாக லாரி ஓட்டுநரான 54 வயது பி. மணி மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட் டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டு களை அவர் ஒப்புக்கொள்ள வில்லை. மலேசியாவில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் விசாரணை கோரியுள்ளார்.