மகாதீரை சாடிய நஜிப்

கோலாலம்பூர்: மலேசியாவில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதி கரித்து வருகிறது. அந்த வரிசையில் எதிர்க்கட்சி கூட்டணித் தலைவர் மகாதீர் முகம்மது லங்காவியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறிய கருத்தினை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சாடியுள்ளார். "கிராப் டாக்சி பிரச்சினை லங்காவியில் மட்டுமல்ல; மலேசியா முழுவதும் உள்ளது.

கிராப் சேவையால் வழக்கமான டாக்சி ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின் றனர். வரும் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் டாக்சி சேவை எல்லோருக்கும் நியாயமானதாக இருக்கும் வகையில் இந்த விவகாரம் மீண்டும் ஆராயப்படும்,"என்று திரு மகாதீர் அந்த பிரசாரக் கூட்டத்தில் கூறினார். கிராப் அல்லது அதுபோன்ற டாக்சி சேவைகள் மலேசியாவில் தடைசெய்யப்பட்டால் பதிவு செய்து கொண்டுள்ள கிராப் ஓட்டுநர்கள் குறைந்தது 50,000 பேர் பாதிக்கப்படுவர் என்று சில செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் திரு மகாதீர் கூறிய கருத்தினை திரு நஜிப் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று கடுமையாகச் சாடியுள்ளார். ஒட்டுமொத்த டாக்சி ஓட்டுநர் களின் ஆதரவைப் பெற திரு மகாதீர் முயற்சி செய்திருப்பதாக திரு நஜிப் கூறினார். தேர்தலில் ஹரப்பான் வெற்றி பெற்றால் கிராப் போன்ற கார்கள் வழங்கி வரும் சேவைகளை மீண்டும் ஆய்வு செய்யவிருப்பதாக திரு மகாதீர் கூறியிருப்பது அத்தகைய சேவை யால் மக்கள் அடைந்துவரும் நன்மைகளை அவர் புறக் கணிப்பதை உணர்த்துகிறது என்று திரு நஜிப் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!