மலேசிய தேர்தல் முடிவில் இழுபறி

உலகின் பல நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வந்த மலேசியாவின் 14வது பொதுத் தேர்தல் முடிவு கள் வியப்பைத் தந்துள்ளன. ஆளும் தேசிய முன்னணிக்கு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிலான இடங்களே கிட்டியுள்ளன. கடந்த 1957ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஆளும் கட்சிக்குக் கடும் போட்டியைக் கொடுத்த தேர்தல் இது.

மேலும் பிரதமர் நஜிப் ரசாக் கிற்கும் முன்னாள் பிரதமர் மகா தீர் முகமதுவுக்கும் இடையிலான தனிப்பட்ட பலப்பரிட்சையாகவும் இந்தத் தேர்தல் அமைந்தது. மாற் றம் அவசியம் என்பதை 14.5 மில் லியன் வாக்காளர்களிடம் எதிர்த் தரப்பு கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் ஆழமாக வலியுறுத்திப் பிரசாரம் செய்தது. பெர்சாத்து என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிபிபிஎம் கட் சியை புதிதாகத் தொடங்கிய மகாதீர் முகமது வலுவான எதிர்க்கட்சியான பிகேஆருடன் கைகோத்ததன் தொடர்பில் உரு வானதுதான் பக்கத்தான் ஹரப் பான். ஜனநாயக செயல் கட்சி, அமனா ஆகிய கட்சிகளும் இணைந்து நான்கு கட்சி கூட்டணியாக ஆளும் தேசிய முன் னணிக்கு சிம்மசொப்பனமாக உருவெடுத்தது.

222 நாடாளுமன்றத் தொகுதி களில் தனிப்பெரும்பான்மை பெற 112 தொகுதிகளில் வெல்ல வேண்டும். கடந்த தேர்தலில் தேசிய முன்னணி 131 தொகுதி களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும் எதிர்த்தரப்புக்கு 72 தொகுதிகள் கிடைத்தன. 2013 தேர்தலில் ஆளும் கட்சிக்கு மலாய் அல்லா தோரின் ஆதரவு அவ்வளவாகக் கிட்டவில்லை. ஆனால், இம் முறை மலாய்க்காரர்களின் ஆதர வும் ஆளும் கூட்டணிக்குக் கிடைப்பது கடினம் என்றே கணிப்பு கள் தெரிவித்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon