பெட்டாலிங் ஜெயா: உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு ஆங்கில மொழியாற்றல் தேர்வு நடத்தப்படும் என்று மலேசிய பிர தமர் டாக்டர் மகாதீர் அறிவித்துள் ளார். "ஆங்கில மொழி மிகவும் முக்கியம், உயர்மட்ட அதிகாரி களிடையே அது புழக்கத்தில் இருக்க வேண்டும்," என்று வாரந்தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகாதீர் கூறினார். "வெளிநாடு மற்றும் அனைத் துலகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளுடனான சந்திப்புகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் உயர்மட்ட அதிகாரிகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகாதீர். படம்: மலே மெயில்