பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதர் நகரில் அடுத்தடுத்து இரு குண்டு கள் வெடித்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்த தாகவும் ஈராக்கியப் போலிசார் தெரிவித் தனர். சதர் நகரில் உள்ள ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசருக்கு அருகே அடுத்தடுத்து இரு குண்டு வெடித்ததாகக் கூறப்பட்டது. அந்த குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பற்றி மாறுபட்ட தகவல்கள் வந்துள்ளன. குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாக அல் ஜசிரா செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் அல்லது காயம் அடைந்த வர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிக மாக இருக்கலாம் என்று ஈராக்கிய தகவல் கள் கூறின. குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.