கியூபெக்: 'ஜி7' நாடுகளின் கூட்டு அறிக்கையை அங்கீகரிக்க மறுத்த அதிபர் டிரம்ப், உடனடியாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். இதனால் 'ஜி7' நாடுகளின் மாநாடு குழப்பத்தில் முடிந்தது. கனடிய பிரதமர் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் அவர் பின்னர் குற்றம்சாட்டினார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள்தான் பெருமளவில் வரி களை விதிக்கின்றன என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியப் பொருட்களுக்கு வரி விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் முடிவை ஜி7 நாடுகள் எதிர்க்கின்றன. இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலையில் 'ஜி7' நாடுகளின் மாநாடு தொடங்கியது. பெரும் விவாதங்களுக்கு இடையே கூட்டு அறிக்கை தயாரிக் கப்பட்டது. ஆனால் அதனை அங்கீகரிக்க டிரம்ப் மறுத்துவிட் டார்.
இந்நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஜூலை 1ஆம் தேதி வரி விதிப்புக்குப் பதிலடித் தரப்படும் என்று சூளுரைத்தார். "கனடா நாட்டவர்கள் பண்பான வர்கள், அதற்காக எப்படி வேண்டு மானாலும் தள்ளிவிடலாம் என்று அர்த்தமல்ல," என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 'ஜி7' நாடுகளின் தலைவர்கள் கூட்டு அறிக்கையைப் பற்றி விவாதித்தனர். கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ஜெர்மானிய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே உட்பட 'ஜி7' தொழில்வள நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்