குவாட்டமாலாவில் உள்ள எரிமலை ஒரு வாரத்திற்கு முன்பு வெடித்துக் குமுறியபோது அந்த எரிமலை கக்கிய புகை, சாம்பல் மற்றும் அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய தீக்குழம்பு இவற்றால் ஒரு கிராமமே அழிந்தது. தலைநகர் குவாட்டமாலா சிட்டியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் சாம்பல் மூடிய கிராமத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மெக்சிகோ மீட்புப் பணியாளர்களும் காணாமற் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குவாட்டமாலாவில் உள்ள எரிமலை வெடித்துக் குமுறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. சுமார் 12,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 36,000 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மக்களின் கோபம் தற்போது அரசாங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எரிமலை வெடித்துக் குமுறுவதற்கு முன்பே அதுபற்றி அதிகாரிகள் எச்சரிக்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. படம்: ஏஎஃப்பி