பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூருக் கும் கோலாலம்பூருக்கும் இடையி லான அதிவேக ரயில் திட்டத்தின் தொடர்பில் தனது முந்தைய முடிவை மாற்றி, "அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது," என்று மலே சியப் பிரதமர் மகாதீர் முகம்மது குறிப்பிட்டுள்ளார்.
தோக்கியோவில் 'ஆசியாவின் எதிர்காலம்' எனும் மாநாட்டுக்கு இடையே நிக்கேய் ஏஷியன் ரிவ்யூ உடனான பேட்டியில் திரு மகாதீர், அதிவேக ரயில் திட்டத்துக்கு தேவைப்படும் பெரும் தொகையைத் தற்சமயம் செலவிட இயலாது என்று கூறியதுடன் அது செயல்படுத்தப்படுவதற்கான சாத் தியம் இன்னும் இருப்பதாகக் கூறியுள்ளார். மலேசியாவுக்கு அதிவேக ரயில் தேவைப்படும் என்று கூறிய டாக்டர் மகாதீர், "மறு பரிசீலனை செய்ய வேண்டும். அது எதிர்காலத் தில் கருதப்படும்," என்றார்.