பாலி: பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டாம் என இந்தோனீசிய ஒளிபரப்பு ஆணைக்குழுவால் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது ஒளிபரப்பு அமைப்புகள், தொலைக்காட்சி, வானொலி நிறு வனங்களுக்கு இந்த அறிக்கை குறித்த தகவல்கள் ஜூன் 8 அன்று கிடைத்தன. நீதிமன்றத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதோடு, வழக்கு களை வெற்றிகரமாக நடத்தவும் நீதிமன்ற அதிகாரிகள், சாட்சி களைப் பாதுகாக்கவும் தீவிரவாதச் சித்தாந்தம் பரவாமல் இருக்கவும் பயங்கரவாதிகளை வீரர்களாக வழிபடாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக் குழு கூறியது.
பயங்கரவாத வழக்குகளை நீண்ட நேரத்துக்கு ஒளிபரப்பு வதால், மக்களிடையே அனுதாபம் ஏற்படலாம் என்றும் தீவிரவாதி யாகச் சந்தேகிக்கப்படுபவர் முன்மாதிரியாகக் கருதப்படலாம் என்றும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.