கோலாலம்பூர்: எதிர்பார்ப்புகளைத் தாண்டி மலேசியா வெற்றி காணும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். ஜப்பான் சென்றிருந்தபோது திரு மகாதீர் இவ்வாறு கூறினார். ஜப்பானில் உள்ள வேலை நன்னெறி முறைகளை மலேசியர் கள் பின்பற்றினால் ஜப்பானைப் போன்று மலேசியாவும் வெற்றி பெறும் என்பதை தான் ஒப்புக்கொள்வதாக திரு மகாதீர் கூறினார்.
திரு மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில் மலேசியா பின்பற்றிய கொள்கைகளை அவர் குறிப்பிட்டுப் பேசினார். ஜப்பானிய முதலீடுகளை ஈர்ப்பது, ஜப்பானில் மலேசிய மாணவர்கள் படிப்பது என்பது மட்டுமல்லாமல் ஜப்பானிய வேலை நன்னெறி முறைகளைப் பின்பற்றுவதில் மலேசியா ஆர்வம் காட்டி வந்ததை அவர் குறிப் பிட்டார். ஜப்பான் வருகையின்போது பிரதமர் ஷின்சோ அபேயை நட்பு ரீதியாக அவரது அலுவலகத்தின் சந்தித்தபோது மலேசியாவில் ஜப்பானியப் பல்கலைக்கழகம் அமைப்பது உட்பட பல யோசனை களைத் தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் முந்தைய அரசாங்கம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களை அடைக்க குறைந்த வட்டிக்குக் கடன் வழங்குமாறு ஜப்பானிடம் திரு மகாதீர் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.