சோல்: அணுவாயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்க படிப் படியான அணுகு முறை தேவை என்பதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புக்கொண் டுள்ள வேளையில் சிங்கப்பூரில் நடந்த இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு கிடைத்த வெற்றி என்று வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்துப் பேசியது இந்த நூற்றாண்டில் மிகவும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் வேளையில் அந்த சந்திப்பு கிம்முக்கு கிடைத்த வெற்றி என்று வடகொரிய ஊடகம் ஒன்று அதன் முதல் பக்கத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.