சானா: ஏமன் நாட்டில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளைக் குறிவைத்து சவூதி ஆதரவு பெற்ற படைகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது கூட்டணிப் படைகள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேற ஹுதி கிளர்ச்சிப் படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில் சவூதி தலைமையிலான கூட்டணிப் படை நேற்று முக்கிய துறைமுகத்தை தாக்கத் தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏமனில் சவூதி தலைமையிலான கூட்டணிப் படை நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த மருத்துவமனையை மக்கள் பார்வையிட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்