அணுவாயுதக் களைவு விரைவில் இடம்பெறவேண்டும் என்பதை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிந்துள்ளார் என்று அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அந்த நடவடிக்கை நிறைவு பெறாதவரை வடகொரியா மீதான பொருளியல் தடைகளை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொம்பியோ எச்சரித்துள்ளார். "அணுவாயுதக் களைவை விரைந்து செய்து முடிக்கவேண் டும் என்பதை திரு கிம் அறிந்து உள்ளார் என நாங்கள் நம்பு கிறோம்," என்று திரு பொம்பியோ கூறினார்.
கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் களைவது தொடர்பில் அண்மை யில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திரு கிம்மை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார். அந்த உச்ச நிலைச் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, "இனி உலகம் நிம்மதியாக உறங்கும்," என்று திரு டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அந்த உச்ச நிலைச் சந்திப்பு குறித்து தென் கொரியத் தலைநகர் சோலில் தென்கொரிய, ஜப்பானிய வெளி யுறவு அமைச்சர்களிடம் திரு பொம்பியோ விவரித்தார்.