ஏமனில் போராளிகளிடமிருந்து முக்கிய விமான நிலையத்தைக் கைப்பற்றிய சவூதி படை

சானா: ஏமனில் ஹுதி போராளிகள் வசம் இருந்த முக்கிய விமான நிலையத்தை சவூதி தலைமையிலான கூட் டணிப் படை கைப்பற்றியது. கூட்டணிப் படை வீரர்கள் விமான நிலையத்திற்குள் சென்று பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்ப தாக தகவல்கள் கூறுகின்றன. விமான நிலையத்தை இழந்ததை ஹுதி கிளர்ச்சிப் படை உறுதிப்படுத்தவில்லை. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாநிலத்தில் ஹுதி போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹொடைடா மாநிலத்துக்கு உட்பட்ட அனைத்துப் பகுதி களையும் மீட்கும் நோக்கத்தில் ஏமன் அரசாங்க ஆதரவுப் படையுடன் சேர்ந்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளும் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்கு தலில் ஈடுபட்டு வருகின்றன.

ஏமனில் போராளிகள் வசம் உள்ள பகுதியில் அரசாங்கப் படை பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகளுக்கு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!