தோக்கியோ: ஜப்பானின் ஒசாகா நகரை நேற்றுக் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட மூவர் இறந் தனர். இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒசாகா நகரை நிலநடுக்கம் உலுக்கியதால் அசம்பாவிதங் களைத் தவிர்ப்பதற்காக பல மணி நேரம் விமான நிலையமும் ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. தொழிற்சாலைகளும் உற் பத்தியை நிறுத்த வேண்டியிருந்தது. நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அள வைக் கொண்டிருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் படவில்லை. இந்த நிலையிலும் அணுசக்தி நிலையங்கள் வழக்கம் போல செயல்பட்டன.
நிலநடுக்கம் ஏற்படும் வட்டாரத் தில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்படும் நில நடுக்கத்தில் 20 விழுக்காடு ஜப் பானில் நிகழ்கிறது. ஒசாகா நகரை நேற்று காலை உள்ளூர் நேரப்படி 8.00 மணிக்கு சற்று முன்னதாக நிலநடுக்கம் தாக்கியது. இதில் பள்ளிக் கட்டடத்தின் சுவர் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி இறந்தார் என்றும் மற்றொருவர் தனது வீட்டில் புத்தக அலமாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார் என்றும் தேசிய தொலைக்காட்சி தெரிவித்தது.
ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் இறங்கி நடந்து சென்றனர். படம்: ஏஎஃப்பி