அமெரிக்கா மிரட்டல்: சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி

வா‌ஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத் துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையில் நிலவும் வர்த்தகப் போர் நீடிக்கும் வேளையில் இரு நாடுகளும் பதில் நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. எந்தெந்த சீனப் பொருட் களுக்கு கூடுதல் வரி விதிப்பது என்பதை கண்டறியுமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி களிடம் கேட்டுக்கொண்டதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக சீனா, சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க விருப் பதாகவும் இந்த வரி விதிப்பு அடுத்த மாதம் முதல் நடப்புக்கு வரும் என்றும் அறிவித்திருந்தது.

சீனாவின் அந்த முடிவுக்கு பதில் நடவடிக்கையாகவே சீனப் பொருட்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கவிருப்பதாக திரு டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திரு டிரம்ப் திங்கள்கிழமையன்று வெளி யிட்ட அறிக்கையில், "சீனா அதன் நடைமுறைகளை மாற்றிக் கொள்ள மறுத்தால், இந்தப் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும்'' என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவு நியாயமான முறையில் இருத்தல் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திரு டிரம்ப் ஏற்கெனவே 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பை கடந்த வாரத்தில் அறிவித்திருந் தார். சீனா கண்டனம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப் போவதாக திரு டிரம்ப் அறிவித்திருப்பது சீனாவை மிரட்டும் செயல் என்று சீன வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!