முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது அரசாங்கம் சுமத்தப்பட இருக்கும் குற்றச் சாட்டுகளில் அரசாங்கப் பணத்தை மோசடி செய்தது, லஞ்சம் பெற்றது போன்றவையும் அடங்கும் என்று பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார். அரசாங்க நிதி நிறுவனமான 1எம்டிபியின் நிதியைக் கையா டியது தொடர்பாக நஜிப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு களைத் தொடர அரசாங்கம் எண்ணியுள்ளதாக அவர் கூறி னார்.
'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறு வனத்துக்கு பேட்டியளித்த டாக் டர் மகாதீர், "பில்லியன் கணக் கான அரசாங்க நிதியை மோசடி செய்தது, கையாடல் செய்தது ஆகியவற்றின் தொடர்பில் முக் கிய சந்தேக நபர்களுக்கு எதி ராக அரசாங்க விசாரணை அதிகாரிகள் ஏற்கெனவே மிகச் சரியாகக் கணித்து வழக்குத் தொடுத்துள்ளனர்," என்றார். 1எம்டிபி நிறுவனத்தைத் தோற்றுவித்த நஜிப் இதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் -குறிப்பிட்டார்.