சீனாவில் ரசாயன ஆலையில் தீ: 19 பேர் பலி

1 mins read

பெய்ஜிங்: சீனாவில் சிச்சுவான் மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து மூண்ட தீயில் 19 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறு வனத் தகவல் தெரிவித்தது. அந்த வெடிப்புக்கான கார ணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர். சீனாவில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் ரசாயன ஆலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த சீனா நடவடிக்கை களை எடுத்து வரும் வேளையில் அந்த ரசாயன ஆலையில் வெடிப்பு விபத்து ஏற்பட்டதாக அதி காரிகள் கூறினர்.