சீனா தலைநகர் பெங்ஜிங்கில் நேற்றுக் காலை ஹெலிகாப்டர் ஒன்று கார் நிறுத்துமிடத்தில் மோ தியது. கூட்டத்தினரைத் தவிர்க் கும் பொருட்டு ஹெலிகாப்டரை அதன் ஓட்டுநர் திருப்பியபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக 'பெய் ஜிங் யூத் டெய்லி' என்னும் அர சாங்க ஊடகம் குறிப்பிட்டது. ரீன்உட் ஸ்டார் விமானப் போக் குவரத்து நிறுவனத்துக்குச் சொந் தமான அந்த ஹெலிகாப்டரின் மூக்குப் பகுதி தரையில் மோதி கீழே சாய்ந்ததாக சீன சமூக ஊடகமான வெய்போ தெரிவித்தது.
சம்பவ இடத்தில் யார் மீதும் மோதல் நிகழாததால் யாருக்கும் காயமில்லை. இருப்பினும் ஹெலி காப்டருக்குள் இருந்த நால்வருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. Bell 429 வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் தரை யில் மோதியதற்கான காரணத்தை போலிசார் விசாரித்து வருகிறார் கள்.
சீனாவின் விமானப் போக்கு வரத்து நிர்வாகமும் விசார ணையைத் தொடங்கி உள்ளதாக ரீன்உட் ஸ்டார் நிறுவனப் பிரதிநிதி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனத்திடம் கூறினார். நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜிங்செங் சாலை அருகே உள்ள நைடோங் கிராமத்தில் ஹெலி காப்டர் விழுந்ததைச் சிலர் பார்த் தனர். முற்பகல் 11 மணியளவில் வானத்திலிருந்து பல தடவை சுழன்றவாறே தரையை நோக்கி வேகமாக அது விழுந்ததாக அவர் கள் தெரிவித்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றனர் அவர் கள். பெண் விமானி தவிர்த்து மூன்று ஆடவர்கள் ஹெலிகாப் டரில் இருந்ததாகத் தெரியவந்தது.
பலத்த சேதமடைந்த ஹெலிகாப்டரைப் பார்வையிட்ட அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்