சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மலேசிய உள்துறை அமைச் சர் முஹைதீன் யாசினைப் பார்க்க மலேசியப் பிரதமர், துணைப் பிர தமர் உள்ளிட்ட தலைவர்கள் இங்கு வருகை புரிந்தனர். திரு முஹைதீன், 71, கணை யத்தில் கட்டி இருந்ததால் சிங் கப்பூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து மருத் துவமனையிலேயே தங்கி தேறி வருகிறார் அவர்.
மலேசியப் பிரதமர் மகாதீர் முஹம்மது, கடந்த சனிக்கிழமை தமது மனைவி சித்தி ஹஸ்மாவுடன் மருத்துவமனைக்குச் சென்று திரு முஹைதீனைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவ்விருவரும் தம் முடன் சுமார் ஒரு மணி நேரம் இருந்ததாக திரு முஹைதீன் பின் னர் தமது ஃபேஸ்புக்கில் குறிப் பிட்டார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் சிங்கப்பூர் வந்து திரு முஹை தீனைச் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவர் நல்லநிலையில் தேறி வருவதாக சிங்கப்பூருக்கு வருகையளித்த மலேசிய தலைவர்கள் இங்கு சிகிச்சை பெறும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து நலம் விசாரித்தனர் திருவாட்டி அஸிஸா தெரிவித்தார். திரு மகாதீர், திருவாட்டி அஸிஸா ஆகியோர் மட்டுமின்றி மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங், கல்வி அமைச்சர் மாஸ்லீ மாலிக் உள்ளிட்ட பலரும் தம்மைச் சந்தித்து நலம் விசாரித் ததாகக் கூறிய திரு முஹைதீன், அவர்கள் தம்மைச் சந்தித்த படங் களையும் ஃபேஸ்புக்கி வெளியிட் டுள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் திரு முஹைதீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக 'த ஸ்டார்' இணையச் செய்தி குறிப்பிட்டது. இதற்கிடையே, மருத்துவ விடுப் பில் இருக்கும் திரு முஹைதீன் ஒரு மாதத்திற்குள் பணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப் படுவதாக அவரது பத்திரிகைச் செயலாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினைச் சந்தித்த மலேசிய பிரதமர் மகாதீர். படம்: முஹைதீன் யாசின் ஃபேஸ்புக்