தைப்பே: தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் முற்றிய நோய் உடையவர்களுக்கு அந்திமகால பராமரிப்புச் சேவை வழங்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். மருத்துவமனையின் ஏழாவது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்தச் சம்ப வத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் குறைந்தது 16 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இறந்த அந்த ஒன்பது பேர், தீயினால் ஏற்பட்ட கறும்புகையைச் சுவாசித்ததால் அவர்களுக்கு இதயத் துடிப்பு திடீரென நின்றுப் போனதாக அறியப்படுகிறது. அவர்களைத் தவிர்த்து எழுவ ருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்ப ட்டு அவர்களது உயிர் மீட்கப்ப ட்டது. படுகாயம் அடைந்த 16 பேரில் 10 பேர் கவலைக்கிடமான நிலை யில் இருப்பதாக உள்ளூர் ஊடக ங்கள் தெரிவித்தன.