அமைச்சர்: தேசிய சேவை திட்டம் ரத்து செய்யப்படுகிறது

கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய குடியியல் பயிற்சி பிரிவு (பிடிஎன்) மற்றும் தேசியச் சேவை திட்டம் ஆகியவை ரத்துச் செய்யப் படுவதாக அந்நாட்டு இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சாதிக் அப்துல் ரஹ்மான் அறிவித்து உள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற இரு அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினா ர். மேற்கூறப்பட்ட இரு திட்டங் களுக்குப் பதிலாக தமது அமைச்சு புதிய திட்டங்களை வரையும் என்றும் அது கூட்டரசு அரசமைப் புக்கும் 'ருக்குன் நெகாரா' எனப் படும் தேசிய கோட்பாடுகளுக்கும் ஏற்ப அமைந்திருக்கும் என்றும் திரு சையது சாதிக் தெரிவித்தார்.

"தேசிய சேவை மற்றும் பிடிஎன் திட்டங்களை ரத்துசெய்து அவற்றின் இடத்தில் வலுவான தொலைநோக்கையும் நல்ல பண்பு நெறிகளையும் கொண்ட இளையர்க ளை உருவாக்கும் திட்டங்களை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது", என்று அவர் கூறினா ர். தேசிய முன்னணி கட்சியால் தொடங்கப்பட்ட தேசிய குடியியல் பயிற்சி பிரிவை ரத்துசெய்ய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத் திற்கு நெருக்கடி நிலவி வந்தது. அந்தப் பிரிவு முந்தைய அரசாங் கத்தின் பிரசார இயக்கமாக செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்ப டுகிறது. வெளிப்புற, உள்புற நடவடிக்கை களை இணைத்து இந்தப் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று திரு சையது சாதிக் சொன் னார். தேசிய முன்னணி கட்சியால் 2004ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட தேசிய சேவை திட்டம், இளையர்களின் பண்புநலன் களையும் தேசிய உணர்வையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!