சோல்: தென்கொரியாவும் வட கொரியாவும் அடுத்த மாதம் வட கொரியத் தலைநகர் பியோங் யாங்கில் உச்சநிலை சந்திப்பை நடத்த இணக்கம் கண்டுள்ளன. இரு நாட்டு அமைச்சுகளின் அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த் தையின் முடிவில் இந்தச் சந்திப்பு குறித்த விவ ரங்கள் அறிவிக்கப் பட்டன. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் இவ்வாண்டு ஏப்ரலில் இரு கொரியாக்களின் எல்லையில் அமைந்துள்ள ராணுவமற்றப் பகுதியான பான்முன்ஜோமில் சந்தித் தனர்.
அடுத்த சந்திப்பை பியோங் யாங்கில் நடத்துவது குறித்து இரு தலைவர்களும் அப்போது இணக்கம் கண்டனர். இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெ றவுள்ள மூன்றாவது சந்திப்பு குறித்து பான்முன்ஜோமில் தென் கொரியாவின் ஒருமைப்பாட்டு அமைச்சரான சோ மியோங்= கியோன்னும் வடகொரியாவின் மறுஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவரான ரி சன் குவோன்னும் பேச்சுவார்த்தை நடத்தினர். உச்சநிலை சந்திப்பு நடத்து வதற்கான தேதி முடிவு செய்யப்ப ட்டுவிட்டாலும் அது குறித்த விவரங்களைத் திரு ரி வெளியிட மறுத்துவிட்டார். ஆனால், இரு கொரியாக் களுக்கு இடையிலான உறவில் ஏற்படும் தடைகளைத் தகர்த்து இரு தரப்பு உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார். இந்தச் சந்திப்பு கொரிய தீப கற் பத்தில் அமைதியை நிலை நாட்டு வதில் கவனம் செலுத்தும் என்றார் அவர்.