லண்டன்: பருவநிலை மாற்றம் காரணமாக தென் துருவத்தில் உள்ள அண்டார்ட்டிகாவில் பனிக் கட்டிகள் உருகுகின்றன. கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது. இத்தகைய காரணங்களால் கடல் ஓரத்தில் உள்ள நகரங்கள் கடலில் மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றன. அவற்றில் அதிவிரைவாக மூழ் கிவரும் நகரமாக இந்தோனீசியாவி ன் ஜகார்த்தா திகழ்கிறது. இங்கு ஏறக்குறைய 10 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரில் 13 ஆறுகள் ஓடுகின்றன. கடல் நீரின் மட்டமும் அதிகரித்தப்படி உள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்ப டும் அபாயம் உள்ளது. தற் போதைய சூழ்நிலையில் ஜகார்த்தா ஆண்டுக்கு 1 செண்டி மீட்டர் முதல் 1.5 செண்டி மீட்டர் வரை கடலில் மூழ்கி வருகிறது. தற் போது ஜகார்த்தாவின் பாதியளவு கடல் மட்டத்துக்குக் கீழே சென்று விட்டது.
கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வதால் வடக்கு ஜகார்த்தா அதிகம் பாதிக்கப்படுகிறது. இதன் சில பகுதிகள் ஆண்டுக்கு 25 செண்டி மீட்டர் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் கடல் நீர் 2.5 மீட்டர் வரை உயரும் அபாயம் உள்ளது. இதற்கிடையே, லொம்போக் தீவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தா ல் அத்தீவின் உயரம் உயர்ந்து உள்ளது. அந்தத் தீவு வழக்கத்தை விட 25 செண்டி மீட்டர் உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை இந்தோனீசியா வின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாசா மற்றும் கலிஃபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் எடுத்த புகைப் படங்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். லொம்போக் தீவில் அண்மை யில் இரண்டு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிர் இழந்தனர். இரண்டாவது நிலந டுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.