வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்ட தற்காப்பு சட்டம், வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தி அழிக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று தற்காப்பு அமைச்சை வலியுறுத்தியுள்ளது. தேசிய தற்காப்புச் சட்டம், பென்டகனுக்கு 716 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியிருக்கிறது. இதில் பத்து பில்லியன் டாலர் ஏவுகணைத் தற்காப்பு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக செலவிடப்படுகிறது.
வடகொரியா அல்லது ஈரானின் எந்தவித மிரட்டல்களையும் தடுத்து நிறுத்துவது அவசியம் என்று தற்காப்புச் சட்டம் குறிப் பிட்டது. ஏற்கெனவே நடப்பில் உள்ள ஏவுகணைகளை வழிமறிக் கும் தொழில்நுட்பத்துக்கு மேலாக மற் றொரு தற்காப்பு முறைகளை சேர்ப் பது குறித்து ராணுவம் ஆராய்ந்து வருகிறது என்று அமெரிக்க ஏவுகணைத் தற்காப்பு முகவையின் பொறியியல் துறை இயக்குநர் கீத் இங்லாண்டர் தெரிவித்தார். இதற்கிடையே ராணுவத்துக்கு 716 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அமெரிக்காவின் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அணுக்கமாகக் கண் காணித்து வருகிறோம் என்று சீனாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.