ஹாங்காங்: ஹாங்காங்கில் பெய் ஜிங் கேட்டுக்கொண்ட பிறகும் சுதந்திர ஆர்வலரின் பேச்சு ரத்து செய்யப்படாததால் பரம வைரி களான இரு குழுக்கள் நேற்று செய்தியாளர் சங்கக் கட்டடத் துக்கு வெளியே கூடி ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டன. பெய்ஜிங் அரசின் ஆதரவாளர் களும் சுதந்திர ஆதரவாளர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராக போட்டி போட்டுக்கொண்டு முழக்கமிட்டனர். போலிசாருடன் மோதலில் ஈடு பட்ட சுதந்திர ஆதரவு குழுவினர், ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கப்படவில்லை என்று கூறினர்.
அதே சமயத்தில் 'கேஸ் த ஸ்பைஸ்' என்ற அமைப்பு உட்பட பெய்ஜிங் ஆதரவு குழுவினர் தங்குத் தடையின்றி ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். வெளிநாட்டு செய்தியாளர் சங்கக் கூட்டத்தில் பேச ஹாங்காங் தேசிய கட்சியின் நிறுவனரும் சுதந்திர ஆர்வலருமான ஆண்டி சானுக்கு அழைப்பு விடுக்கப் பட்டதைத் தொடர்ந்து கடும் விமர் சனங்கள் எழுந்தன. சீன வெளியுறவு அமைச்சரும் அவரது பேச்சு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் வலி யுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர ஆர்வலர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் ஹாங்காங் போலிசார். படம்: ஏஎஃப்பி