கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் மலேசியா தேடி வரும் வர்த்தகர் ஜோ லோ மீதும் அவரது தந்தை மீதும் கிரிமினல் குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக தி எட்ஜ் எனப்படும் வர்த்தக சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. கள்ளப்பணப் பரிவர்த்தனை தொடர்பில் அவர்கள் மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான 457 மில்லியன் அமெரிக்க டாலர் (S$628 மில்லி யன்) ரொக்கப் பணம் 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் முறை கேடாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
புத்ராஜெயாவில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. ஜோ லோ மற்றும் அவரது தந்தையை கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் தாக்கல் செயயப் பட்டுள்ளது. அவ்விருவர் மீதும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், அவ் விருவரையும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்புமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ள முடியும். அடுத்த கட்ட நடவடிக்கை அவ்விருவரையும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்புமாறு சம்பந்தப்பட்ட நாட்டிடம் கேட்டுக்கொள்வதுதான் என்று நீதித்துறை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.